கேரள நடிகை மர்ம மரணத்திற்கு அவரது கணவர் காரணமா?

0
259

கடந்த நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் காசர்கோட்டையை சேர்ந்த சகானா என்ற 20 வயது மாடல் அழகி மர்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்துள்ளார்.

இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்த நிலையில், உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். 1 வருடத்திக்கு முன்பு தான் சஜ்ஜாத் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

சகானாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், கணவர் தான் காரணம் என உறவினர்கள் பெற்றோர்கள் கூறிய நிலையில், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என போலீசில் புகார் அளித்தனர்.

பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

இதன்பின்னர், பிரேத பரிசோதனையில் சகானாவின் உடலில் சிறு காயங்கள் இருந்தது தெரியவந்ததுள்ளது. இது தொடர்பான அறிகையை மருத்துவர்கள் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

உடனடியாக கணவர் சஜ்ஜாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடிக்கையின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள நடிகையின் மர்மமான சாவிற்கு கணவர் தான் காரணமா? பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி!

கணவருடன் தகராறு

மேலும், இதுகுறித்து லாக்டவுன் தமிழ்பட இயக்குனர் ஜோளி பாஸ்டியன் தெரிவிக்கையில், சினிமா செட்டில் வைத்து ஷகானாவுக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

ஏதோ ஒரு வகை மன உளச்சலில் இருந்ததை புரிந்து கொண்டேன். சகானாவை வைத்து மற்றொரு படம் இயக்க திட்டமிட்டு இருந்த நேரத்தில் அவரது மரண செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.