இலங்கையின் இராணுவ புலனாய்வை செயலிழக்கச் செய்த அமெரிக்கா!

0
954
Sri Lanka's Army Chief Shavendra Silva (C) arrives at the 40th-anniversary celebration of the Sri Lanka Commando Regiment held in Colombo, Sri Lanka on March.08.2020 (Photo by Akila Jayawardana/NurPhoto)

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற கலவரங்களைப் பொறுத்தமட்டில், இராணுவத்தினர் பெரியளவில் அதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கையிலோ அல்லது எதிர்வினையாற்றும் நடவடிக்கையிலோ தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

அப்போது ஒரு கேள்வி எழுந்தது, அரசாங்கம் தான் அதனை தடுத்து வைத்திருக்கின்றதா என்று. ஆனால் தற்போதைய உள்ளக தகவல்களின் படி அரசாங்கம் கட்டளைகளை கொடுத்த போதும் இராணுவம் அதனைப் பின்பற்றவில்லை என்பது வெளிப்படையாக தெரியவருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குரிய காரணம் என்னவென்றால் சவேந்திர சில்வாவைப் பொறுத்தவரையில் போர்க்குற்றம் தொடர்பில் அவர் மீது வழக்குகள் உள்ளன.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அமெரிக்கா ஒருவர் மீது அழுத்தங்களைக் கொண்டு வருவதென்பது முதலில் அவரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதுதான் அமெரிக்காவின் திட்டம். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சரத் பொன்சேகாவின் மீதும் அமெரிக்கா அவ்வாறான ஒரு அழுத்தத்தைத் தான் கொண்டு வந்தது என அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.