வியாபார குறியீடு இல்லாமல் பசளையை ஏற்றிச்சென்ற இருவர் கைது!

0
87

மன்னாரில் இருந்து ஏறாவூர் பகுதிக்கு வியாபார குறியீடு இல்லாமல் எமோனியம் சல்பைட் என்றழைக்கப்படும் பசளையை ஏற்றிச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (15) திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி – ரொட்டவெவ பொலிஸ் சோதனைச் சாவடியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஹொரவ்பொத்தானை-இஹல அங்குநொச்சி பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 40 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்றைய தினம் திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.