சர்வதேச தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்த சஜித் !

0
591

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச தூதுவர்களைக் கேட்டுக் கொண்டார்.

நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடி நிலை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் தூதுவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சீபி, ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் லோதர் ஷூபர்ட், பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெர்டே, நெதர்லாந்து தூதுவர் தஞ்சா காங்ரெஸ், இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானோ மனெல்லா, ரோமானிய தூதுவர் விக்டர் குஜெடா ஆகியோர் கலந்துகொண்டனர்.