உக்ரைன் போர் குறித்து ரஷ்ய – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் ஆலோசனை!

0
203

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியபின் முதன்முறையாக ரஷ்யா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் தொலைபேசியில் பேசிக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கிய பின்னர் முதன்முறையாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இருப்பினும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்குவும், அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாய்ட் ஆஸ்டினும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் ஆக்கபூர்வ ஆலோசனை ஏதும் மேற்கொள்ளவில்லை என்றேத் தெரியவந்துள்ளது.

இதனிடையே, ஆஸ்டின் ஒரு மணி நேரம் ரஷ்ய அமைச்சருடன் பேசியுள்ளார் எனவும், போர் 12 வாரத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு ஆஸ்டின் வலியுறுத்தியுள்ளார் எனவும் அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.