தனியார் பேருந்து சேவைகள் 10 சதவீதமாக குறைப்பு!

0
181

டீசல் இன்மையால் இலங்கை முழுவதும் பேருந்து சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் நாளை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து விலக நேரிடும் எனவும் அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு சில தினங்களுக்கு மாத்திரமே டீசல் கையிருப்பில் உள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.