புகையிரதத்தில் ஏற்பட்ட கோளாறு… அவதிக்குள்ளான மக்கள்

0
33

மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற புகையிரதத்தில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் நோக்கி நேற்று (14) பிற்பகல் 2 மணியளவில் பயணித்த புகையிரதம் வவுனியா ஆண்டியபுளியங்குளம் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக சேதமடைந்துள்ளது.

நீண்ட நேரமாக ரயில் இயக்கப்படாததால் பொதுமக்கள் பஸ்களில் ஏறி பயணத்தை தொடர்ந்தனர்.