ஜனாதிபதிக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு!

0
273

நாளை மறுநாள் (17-05-2022) இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய வாக்கெடுப்புகள் நடைபெற உள்ளன.

இலங்கையில் அண்மைக்காலமாக நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்களை காரணமாக மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

இதையடுத்து இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள், மூன்று முக்கிய வாக்கெடுப்புகள் நடைபெற உள்ளன.

புதிதாக பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மீது அதிருப்தி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.