மீண்டும் அதிகரித்தது பால் மாவின் விலை!

0
353

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பாரிய பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில் எரிவாயு, எரிபொருள் உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் புதிய விலை 1020 ரூபாவாகும்.