இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட முக்கியத் தகவல்!

0
250

விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் தாக்குதல் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள தகவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, சாதாரண தரவுக்கு அமைவாகவே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்க்பட்டு, உரிய தரப்புக்கு தகவல்கள் பெற்றுக்கொடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.