வரும் 17 ஆம் திகதி முக்கிய மூன்று வாக்கெடுப்புகள்!

0
234

எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முக்கிய மூன்று வாக்கெடுப்புகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அன்றைய தினம் முதலாவதாக பிரதி சபாநாயகர் தெரிவு நடைபெறும்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவர் போட்டியிட்டால் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். பின்னர் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறும்.

இதையடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறும் என நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.