பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் ரணில் பரிந்துரை!

0
260

பிரதி சபாநாயகர் பதவிக்கான வெற்றிடம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறு எம்.பி.க்களிடம் பிரதமர் கேட்டுள்ளதாக தெரியவருகிறது. அந்தப் பதவிக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை நியமிக்க பிரதமர் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்துவதாக பிரதமர் எம்.பி.க்களிடம் தெரிவித்ததாக தெரியவருகிறது.