பெண் சபாநாயகர் பதவி குறித்து கோரிக்கை விடுத்த ரணில்!

0
286

அடுத்த பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று காலை தம்மைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் பிரதமர் இதனைத் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி கூடும் போது பிரதி சபாநாயகரை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்குமாறு கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

முன்னர் பிரதி சபாநாயகராக இருந்த ரன்ஜித் சியம்பலாபிடிய இராஜினாமா செய்ததனை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.