அழிவின் விழும்பிலுள்ள பெங்குயின் இனம்!

0
85

அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் அண்டார்டிகாவில் உள்ள பெங்குயின் இனம் அழியும் அபாயம் உள்ளது என நம்புவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பருவ நிலை மாற்றத்தால் அண்டார்டிகாவில் வானிலை மாறி, அதிக வெப்பம், சீரற்ற மழைப் பொழிவு, என பனி வேகமாக உருகி வருவதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

கால நிலை மாற்றத்தால் பெங்குயின் இனத்தில் பெரிய வகையான பேரரச பெங்குயின்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பனி உருகி வரும் வேகத்தால் அடுத்த 40 ஆண்டுகளுக்குள் பெங்குயின் இனம் அழியும் சூழல் நிலவுவதாக அர்ஜெண்டின் ஆண்டார்டிக் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.