மரண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தியானந்தா!

0
206

சாமியார் நித்தியானந்தாவைச் சுற்றும் சர்ச்சைகளுக்குப் எப்போதும் பஞ்சமில்லை.

கைலாசாதீவின் அதிபதி என கூறும் சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர் மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் பறந்த நிலையில், நித்தியானந்தவிடமிருந்தே அது குறித்த விளக்கக் குறிப்பு வெளியாகியிருக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பதிவான ஒரு வழக்கில் தன்னை போலீஸ் தேடுவது தெரிந்தவுடன், இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தென்பசபிக் பெருங்கடலிலுள்ள தீவு ஒன்றில் அடைக்கலம் ஆனதாகக் கூறப்படுகிறது.

அதனை கைலாசா என பெயரிட்டு தினந்தோறும் சமூக வலைதளங்கள் மூலமாக சொற்பொழிவு ஆற்றி வந்தார் நித்தியானந்தா.

இந்தச் சூழலில்தான் நித்தியானந்தா நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டதாகவும், ஏற்கெனவே ‘ஷூட்’ செய்த வீடியோக்களைத்தான் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாகவும் புது வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தொடர்பாக, நித்தியானந்தா விளக்கமளித்திருக்கிறார்.