மீண்டும் ஐ.பி.எல் இல் களமிறங்கும் லசித் மலிங்கா!

0
867

இலங்கை வீரர்கள் ஐபிஎல்லில் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வரும் இலங்கை வீரரான வனிந்து ஹசரங்கா, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக நேற்றைய போட்டியில் ஊதா நிற தொப்பி கைப்பற்றினார்.

பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த அந்த போட்டியில் அவர் 2 விக்கெட்டுகளை சாய்த்ததன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் வீழ்த்திய விக்கெட்டுகள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான லசித் மலிங்கா, ஊதா தொப்பியை கைப்பற்றிய ஹசரங்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், ‘ஊதா நிற தொப்பியை கைப்பற்றிய ஹசரங்காவுக்கு வாழ்த்துக்கள். இலங்கை வீரர்கள் ஐபிஎல்லில் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஊதா தொப்பிக்கான போட்டி என்பது வனிந்து மற்றும் சஹால் இடையிலான அற்புதமான போர் ஆக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

ஹசரங்கா 45 ஓவர்கள் வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், சஹால் 48 ஓவர்களில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆகவே தான் அவர்களுக்கு இடையிலான இந்த போட்டியை மலிங்கா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹசரங்காவை போல் பஞ்சாப் அணியில் விளையாடி வரும் இலங்கை வீரர் பனுகா ராஜபக்சே துடுப்பாட்டத்தில் மிரட்டி வரும் நிலையில், மற்றோரு இலங்கை வீரரான சமீரா லக்னோ அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.