வீழ்ந்த வெசாக் பந்தல்கள்! பயத்தில் தென்னகத்தினர்

0
572

வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு கொழும்பு புறக்கோட்டையில் வெசாக் தோரண பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் அவை சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீசிய பலத்த காற்றில் சிக்கிய குறித்த பந்தல் பின்னோக்கி சாய்ந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த வெசாக் பந்தல் 25ஆவது தடவையாக வியாபாரிகள் சங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெசாக் பந்தல் ஒன்று உடைந்து விழுந்திருப்பது நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கும் என தென்னிலங்கை மக்கள்  அச்சம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Gallery

Gallery

Gallery