அமெரிக்காவில் மூடநம்பிக்கையால் 3 வயது சிறுமி மரணம்!

0
218

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா தேவாலயத்தில் பேயோட்டும் சடங்கின் போது 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த 3 வயது சிறுமியின் தாத்தா மற்றும் மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.

அரேலி நவோமி ப்ரோக்டர் என்ற குழந்தை கடந்த வருடம் செப்டம்பரில் இறந்தது. அக் குழந்தை ஒரு தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் நம்பியதால் ஒரு சடங்கை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மூச்சுத்திணறல் காரணமாக ஏற்பட்ட கொலையே இது என மாவட்ட மருத்துவ பரிசோதகர் நீதிமன்றத்திற்கு சம்ர்ப்பித்த ஆவணங்களில் கூறியுள்ளது. சாண்டா கிளாரா மாவட்ட மருத்துவ பரிசோதகர் அலுவலகம் இந்த மரணம் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்பட்ட கொலை என கூறியுள்ளது.

குழந்தையின் தாத்தா மற்றும் சான் ஜோஸில் உள்ள சிறிய பெந்தேகோஸ்தே தேவாலயமான Iglesia Apostoles y Profetas இன் போதகரான Rene Trigueros-Hernandez மற்றும் குழந்தையின் மாமா ரெனே ஹெர்னாண்டஸ்-சாண்டோஸ் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.

நீதிமன்ற பதிவுகளின்படி கிளாடியா ஹெர்னாண்டஸ்-சாண்டோஸ் பொலிஸாரிடம் தனது மகள் எழுந்துவிட்டு கத்துவார் அல்லது அவ்வப்போது அழுவாள் என்பதால் தான் பேய் பிடித்திருப்பதாக நம்புவதாகக் கூறினார். அவளும் அவளுடைய சகோதரனும் குழந்தையை தேவாலயத்திற்கு செப்டம்பர் 24 அன்று அழைத்து வந்து தந்தையுடன் சேர்ந்து பேயோட்டியுள்ளனர்.

இதன்போது தனது மகளின் தொண்டையில் விரலை போட்டு வாந்தி எடுக்க வர வைக்க முயன்றதுடன் தாத்தாவும் மாமாவும் குழந்தையைக் கீழே வைத்திருக்கும் போது சிறுமிக்கு உணவு வழங்காமல் விட்டதாகவும் கழுத்தைப் பிடித்து அழுத்தியதாகவும் குழந்தையின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் மூன்று வயது குழந்தை மூடநம்பிக்கையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.