யாழில் கள்ளக் காதலனுடன் மனைவி செய்த பயங்கரம்!

0
563

யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணி பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 11ஆம் திகதி கொலையுண்ட நபரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் சிவஞானம் சிவதாசன் என்ற 42 வயது நபர் காணாமற் போயுள்ளதாக ஏற்கனவே இந்தப் பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த கொலை தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், நீதிமன்றத்திற்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் சம்மந்தப்பட்ட பெண்ணையும் அவரது கள்ளக் காதலனையும் கைது செய்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.