போராட்டத்தில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்த நிகழ்வு

0
476

கோட்டா கோ கமவில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்த சம்பவம் ஒன்று காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார செருகடியை அடுத்து மக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பட்டங்களை முன்னெடுத்தனர். அந்த வகையில் காலி முகத்திடலில் கோட்டா கோ கம எனும் மாதிரி கிராமம் உருவாக்கப்பட்டு தொடர்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன, மத மொழி பேதமின்றி மூவின மக்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில் போராட்டம் இன்னும் தொடர்கின்றது. எனினும் மக்களின் போராங்கங்களை கண்டுகொள்ளாத ராஜபக்சர்கள் மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதற்கெல்லாம் ஈடுகொடுத்து மக்கள் இன்னும் போராட்டத்தை நடத்திவருகின்றனர். இந்நிலையில் கோட்டா கோ கமவில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்த சுவாரஸ்ய சம்பவமும் காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த திருமணம் எப்போது இடம்பெற்றது என்பது தெரியவராத நிலையில், மணமக்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.     

Gallery