இந்திய விசா வழங்குவது நிறுத்தமா?

0
230

விசா வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகளை எவ்வித உண்மையும் இல்லையென கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அல்லது இந்திய துணைத்தூதரகம் அல்லது உதவி உயர்ஸ்தானிகராலயமோ விசா வழங்கும் செயற்பாடுகளை நிறுத்தவில்லையென அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.