காலை வாரிய மைத்திரியால் கடுப்பில் ரணில்!

0
248

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் அமையவுள்ள இடைக்கால அரசுக்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

எந்தவொரு பதவியும் ஏற்கப்படமாட்டாது என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கட்சி தலைமையகத்தில் கூடியது. இதன்போதே புதிய அரசுக்கு ஆதரவளிக்ககூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.