புதிய அமைச்சரவையில் தமிழர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு!

0
309

இலங்கையில் புதிய அமைச்சரவை உருவாகும் சூழலில் தமிழர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் புதிய பிரதமராக ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இன்றைய தினம் பதிவியேற்றுள்ளார்.

இந்த நிலையில் நாளை புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, ராஜபக்ஷ இருக்கும் ஆட்சியில் எந்த பதவியும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழ், இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க ரணில் விக்கிரமசிங்கே முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் தொலைபேசியில் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.