மே 15 – 16 இல் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

0
456

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை , மேற்படி தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிச் செயற்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.