இணைய வழி சிறுவர் குற்றச் செயல்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

0
208

சிறார்களுக்கு எதிரான சைபர் குற்றச் செயல் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏழு ஆண்டு காலப் பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றச் செயல்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இணைய வழியில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் மற்றும் துஸ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 131 என உயர்வடைந்துள்ளது எனவும், 2014ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 50 ஆக காணப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் பெருந்தொற்று ஆரம்பமான முதல் ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றச் செயல்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது என கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2020ம் ஆண்டில் இணைய வழியில் சிறார்களுக்கு எதிரான சைபர் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 22 வீத்த்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இணைய வழியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக டால்ஹவுசி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வாயென் மெக்கெ தெரிவித்துள்ளார்.

இணைய வழியில் இடம்பெறும் சிறுவர் பாலியல் குற்றச் செயல்கள் பல முறையாக பதிவாவதில்லை என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் பாதிக்கப்படுபவர்களில் 73 வீதமானவர்கள் 12 முதல் 17 வயது வரையிலான பெண் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.