நாடளாவிய ரீதியில் மீண்டும் அமுலுக்கு வந்த ஊரடங்கு!

0
385

இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை தற்காலிகமாக தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவானது மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளைய தினம் காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்ட போதிலும் கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை மற்றும் இராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகள் அவ்வாறே நடைமுறையில் காணப்பட்டன.

இதற்கமைய குறித்த இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்புத் தரப்பினர் சோதனைகளை முன்னெடுப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அதேசமயம் ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதை அடுத்து தொடர்ந்து சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் போதியளவு எண்ணிக்கையிலான தொடருந்துகள் சேவையில் ஈடுபடாமையால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.