பிரதமராக மகுடம் சூடப்போவது யார்? சஜித்தா… ரணிலா?

0
247

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

எனினும் ஜனாதிபதி கோட்டபாய பதவி விலகாது விடாப்பிடியாக இருந்து வருகின்றார். அதேசமயம் அதேநிலைப்பாட்டில் இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த திங்களன்று ஏற்பட்ட கலவரத்தை அடுத்து தனது பதவியை இராஜினமா செய்திருந்தார்.

இவ்வாறான நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, புதிய பிரதமராக இன்று மாலை 6.30க்கு சத்தியப்பிரமாணம் செய்துக்​கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் வைத்தே அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில் 4 நிபந்தனைகளுடன் தாம் ஆட்சியை பொறுப்பேற்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இலங்கையின் அடுத்த பிரதமராக யார் வருவார் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.