பேருந்து, ரயில் சேவைகள் வரையறையறுக்க தீர்மானம்!

0
205

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இன்று காலை 08 மணி முதல் ரயில் போக்குவரத்தை வரையறைகளுடன் முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைவாக, வெயாங்கொடை மற்றும் களுத்துறை இடையிலான ரயில் போக்குவரத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுப்படுத்தப்படும் என திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த ரயில் சேவை தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் வாடிக்கையாளர் பிரிவின் 1971 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் சேவைகளை வரையறைகளுடன் முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.