இன்று மாலை புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்கிறார் ரணில்!

0
261

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, புதிய பிரதமராக இன்று மாலை 6.30க்கு சத்தியப்பிரமாணம் செய்துக்​கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் வைத்தே அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளது.

அதன்பின்னர், கொழும்பு-02 கங்காராமவில் மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர்கள் பலரும் தங்களுடைய ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.