இளம்பெண் தண்ணீர் குடித்தால் ஆசிட் எரியும் நோய்!

0
437

அமெரிக்காவின் அரிசோனாவில், அபிகைல் பெக் (Abigail Beck). என்ற 15 வயது ஆன இளம்பெண் ஒருவர் Aquagenic Urticaria விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த அரிய வகை நோயானது 200 மில்லியன்களில் ஒருவரை தான் பாதிக்குமாம். அதாவது தண்ணீர் உடம்பில் படும் போது ஒருவித எரிச்சல் ஏற்படும் என கூறப்படுகிறது.

ஆசிட் போன்ற உணர்வு

மேலும் இந்த மாணவியின் உடலில் மழைநீர் படும்போதும் குளிக்கும்போதும் படும் தண்ணீர், ஆசிட் போன்ற உணர்வை தருவதாக தெரிவித்துள்ளார்.

இதனாலேயே அபிகைல் என்ற இந்த மாணவி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தான் குளிக்கிறாராம்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒரு க்ளாஸ் தண்ணீரை கூட குடிக்க வில்லையாம். அதற்கு பதிலாக தண்ணீர் உடம்பில் படும் போது ஒருவித எரிச்சல் ஏற்படும் என கூறப்படுகிறது.

13 வயதில் உணர்ந்துள்ளார்

இப்படிப்பட்ட அலர்ஜி நோயை தனது 13 வயதில் அபிகைல் உணர்ந்து இருக்கிறார். ஒட்டுமொத்தமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100 பேர் மட்டுமே.

ஒருவர் வயதுக்கு வரும்போது தான் இந்நோய் உருவாகுமாம். இந்த அரிய வகை நோய்க்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளும் வழிகள் தெளிவாக இல்லை.

தண்ணீரை குடித்தால் ஆசிட் போன்று எரியும்... இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விசித்திர நோய்!

அழுதால் கூட உடல் புண்ணாகிவிடும்

இதுகுறித்து அந்த பெண் அபிகைல் கூறும்போது, என்னுடைய கண்ணீர் கூட எனக்கு எரிச்சலையும் காயத்தையும் ஏற்படுத்தும்.

தண்ணீர் குடித்தால் எனது நெஞ்சு பகுதியில் வேதனையாக உருவாகி இதயதுடிப்பை அதிகரிக்க செய்யும்.

ஒரு ஆண்டுக்கு முன் தான் நான் கடைசியாக தண்ணீர் குடித்தேன். இந்த நிலை இன்னும் மோசமானால் என்ன செய்வதென்று கூட எனக்கு தெரியவில்லை.

இது ஒரு அரிய நோய் என்பதால் இது பற்றி எதுவும் தெரியாத எனது மருத்துவர்களுக்கும் நான் தான் எனது நிலை பற்றி விளக்கம் கொடுக்கிறேன்.

மனிதனின் உடலே நீரால் ஆனது என்னும் நிலையில் தண்ணீருக்கும் எனக்கும் செட் ஆகாது என நான் கூறினால் பலரும் என்னை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள் என அபிகைல் வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார்.