மலையகத்தால் பதவி பெற்ற தமிழ் அரசியல்வாதியின் நிலை

0
244

மலையக மக்களை அடகு வைத்து கடந்த அரசாங்கத்திடம் ராஜாங்க அமைச்சு பதவியை பெற்ற தமிழ் அரசியல்வாதியின் நிலை பரிதாபமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், பெருந்தொகை பணத்திற்காக ராஜாங்க அமைச்சு பதவியை பெற்றவர், இருக்க இடமின்றி தவித்து வருவதாக தெரிய வருகிறது.

மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் அவரின் தனிமைப்பட்ட பாவனைக்காக 10 புதிய கார்களும் வழங்கப்பட்டிருந்தன. சில நாட்களுக்கு ராஜபோக வாழ்க்கையை வாழ்ந்தவருக்கு தற்போது தனது சொந்த ஊர் பக்கம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பிலுள்ள பல ஹோட்டல்களில் மாறி மாறி தங்கி வருவதாகவும், அரசாங்கத்திடம் பெற்ற இலஞ்ச பணத்தை அதற்காக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவுக்கு ஆதரவானவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு தாங்கி அழித்து வரும் நிலையில், தானும் தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக அவர் தலைமறைவாகி வருவதாக தெரிய வருகிறது.

மலையக மக்களின் மத்தியில் பிரபல்வாய்ந்த அரசியல்வாதியான மறைந்த சந்திரசேகரின் கட்சியை சார்ந்த ஒருவர் ராஜாங்க அமைச்சு பதவியை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.