இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவிற்கு தப்பி ஓட்டம்?

0
245

சிறிலங்கா அரசியல் பிரமுகர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எவரும் இந்தியாவுக்கு வெளியேறவில்லை என்றும் அது தொடர்பாகச் சில செய்தி நிறுவனங்கள் சமூகவலைத் தளங்களில் பரப்பப்படுகின்ற தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரச பிரமுகர்கள் எதிர்ப்புக்கு அஞ்சி இந்தியாவுக்கு வருவது அங்கும் அமைதி இன்மையையும் ஆர்ப்பாட்டங்களையும் பரவச்செய்து விடலாம் என்று இந்திய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இதேவேளை, பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, இலங்கையைப் பெயர் குறிப்பிடாமல் இந்தியா தனது படைகளைக் கலவரப் பகுதிக்குஅனுப்ப வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்திய எதிர்ப்பு வெளிநாட்டுச் சக்திகள்மக்களின் கோபத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திவருவது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. எனவே இந்தியா அரசமைப்பின் ஆட்சியை உறுதி செய்வதற்காகத் தனது படைகளை அனுப்பவேண்டும்” என  சுப்ரமணியன் சாமி தனது பதிவில் எழுதியுள்ளார்.

அவரது இந்தக்கருத்து சமூகவலைத் தளங்களில் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. அதேவேளை இந்திய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகிய சுவாமி, மஹிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.