இலங்கை தொடர்பில் பாப்பரசர் விடுத்த வேண்டுகோள்!

0
761

போராட்டங்கள் வன்முறையாக மாறி பலரைக் கொன்று குவித்துள்ள நிலையில், இலங்கை மக்கள் அமைதியான வழியில் தங்கள் குரலைக் கேட்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பாக “சமீபத்திய காலங்களில் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து தங்கள் அழுகையை ஒலிக்கும் இளைஞர்களுக்கு” தனது வாழ்த்துக்களை அனுப்புவதாக போப் கூறினார்.

“வன்முறைக்கு அடிபணியாமல், அமைதியான அணுகுமுறையைப் பேணுமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துவதில் நான் மத அதிகாரிகளுடன் இணைந்துகொள்கிறேன்.” எதிர்ப்பாளர்களின் குரல்களுக்கு செவிசாய்க்குமாறு இலங்கையின் ஆளும் அரசியல் தலைவர்களுக்கும் பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

“மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கவும், மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு முழு மரியாதையை உறுதிப்படுத்தவும் பொறுப்புகள் உள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” கொரோனா தொற்றுநோய் வெடித்ததில் இருந்து இலங்கையின் பொருளாதாரம் அதன் சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்திற்கு முட்டுக்கட்டை போட்டதில் இருந்து கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

அந்நாடு தனது வெளிநாட்டு நாணயத்தின் இருப்புகளை சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைத்துள்ளது, இதனால் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுமார் 22 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையர்கள், உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர், அவற்றில் பல வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.