பதற்றமான சூழலில் கட்டுநாயக்க விமான ஊழியர்கள்

0
894

கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் செயலிழந்துள்ளதுடன், முழுமையாக மக்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாகவும், இதனை யாராலும் தடுக்க முடியாது எனவும் பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

பிரமுகர்கள் நாட்டிலிருந்து வெளியேற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில்,கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை போராட்டக்காரர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.

அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் காரணமாக நாடு முழுமையாக மக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.