பொதுமக்களுக்கு இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

0
333

பொதுமக்களை குழப்பமடையச் செய்யும் எந்தவொரு தரக்குறைவான செயலிலும் முப்படையினர் ஈடுபட மாட்டார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா (Shavandra Silva) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) ஆதரவாளர்களால் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அத்துடன், பொதுமக்களின் சொத்துக்களை திருடுவோர், சேதங்களை விளைவிப்போர் மீது முப்படையினர், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.