இன்றைய ராசிபலன் (11 மே 2022)

0
109

மேஷம்

மேஷ ராசியினர் புகழின் உச்சத்திற்குச் செல்லக்கூடிய நாளாக இருக்கும். மற்றவர்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்த முயல்வீர்கள். . உத்தியோகஸ்தர்கள், சக ஊழியர்களுடன் சச்சரவுகளை தவிர்த்துக்கொண்டால் தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உங்கள் எதிரிகளை எளிதாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். நீங்கள் கூறும் அறிவுரைகள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொழுதுபோக்குகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப வாழ்க்கை மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

ரிஷபம்

இன்று சரியான திட்டமிடலுடன் உழைத்தால், உங்களுக்கு அதற்கான பலன்கள் சில மடங்கு அதிகமாக கிடைக்கும். பணியிடத்தில் தங்கள் கடமை உணர்ந்து செய்வது அவசியம். உரிய பாராட்டு மற்றும் மரியாதையைப் பெறலாம்.

குடும்பத்திற்கான உங்கள் கடின உழைப்பும், புரிதலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற உதவும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். நிதி நிலை முன்னேற்றம் பெற இது ஒரு நல்ல நாள்.

மிதுனம்

புதிய தொழில் தொடங்கும் எண்ணங்கள் மனதில் தோன்றலாம் அல்லது அது நிஜமாகலாம். இன்று அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும், நீங்கள் புகழ் பெற வாய்ப்புள்ளது.

இலக்கியம், கலை, எழுத்து, இசை, திரைப்படம் அல்லது விளையாட்டு போன்ற படைப்புத் துறைகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளையும், அதில் நல்ல பாராட்டு பெறுவதோடு, லாபகரமான சலுகைகளையும் பெறலாம்.

​கடகம்

கடக ராசிக்கு நிதி நிலை முன்னேற்றம் தரக்கூடிய நாள். பல வழிகளில் உங்களுக்கு லாபம் தரக்கூடிய வாய்ப்புகள், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வணிக சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். இன்று எந்த செயலை கையில் எடுத்தாலும் அதில் வெற்றியும், லாபமும் கிடைக்கும்.

சிம்மம்

இன்று பணியிடத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாக உங்கள் காரியங்கள் சீராகி நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும், நிதி நன்மைகளைப் பெற புதிய வழிகளையும் காண்பீர்கள்.

பெரியோரின் அன்பும் ஆலோசனையும் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும். நற்பெயர் கிடைக்கும்.

​கன்னி

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரம் மற்றும் பிற முயற்சிகளிலும் உங்கள் வருமானம் பெருமளவில் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருமான உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் ஆர்வமும், அது சார்ந்த வேலைகளில் ஈடுபடுவீர்கள். புகழ் அதிகரிக்கும். உங்கள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். இதன் காரணமாக உங்கள் மனக்கவலைகள் நீங்கும்.

​துலாம்

வியாபாரம் சேவைத் தொழில் பத்திரிகைத் தொழில் கலைத்துறை வாகன தொழில் அரசு நிர்வாகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும். தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முற்பகலில் வெற்றி அடையும்.

பெண்களுக்கு நல்லதொரு நாளாகும். காதலில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக உள்ளது. புது தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும்.

விருச்சிகம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். எதிர்பார்த்த பணவரவு உண்டு குடும்பத்தில் அமைதி நிலவும். பிற்பகலில் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் புதிய நட்புகள் உருவாகும்.

பெண்களுக்கு இனிய நாளாக இந்த நாள். அமைந்தாலும் நாளின் பிற்பகுதியில் சற்று விட்டு கொடுத்து செல்வது குடும்ப அமைதியே மேம்படுத்தும். உத்தியோகத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்.

தனுசு

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தன வரவு நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டமிடுதல் மனதில் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கும் கமிஷன் ஏஜென்சி போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கும் இன்று வருமானம் நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும்.

மகரம்

இன்று முழுவதும் சந்திராஷ்டமம் என்பதால் அலைச்சல் அதிகமாகும். தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். வெளியூர் மற்றும் வெளி நாட்டில் வேலை தொடர்பான செய்தியை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

நாளின் பிற்பகுதியில் குடும்பத்தில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கோபத்தை குறைத்து கொள்வது அவசியம். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் உண்டு உடல் அசதி அதிகமாக இருந்து வரும்.

​கும்பம்

நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள். புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும் போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு காண சுமூகமான சூழ்நிலை நிலவும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டு. மருந்து மற்றும் மருத்துவ துறை ஆன்மீகத் துறை இயந்திரவியல் வங்கி தொழில் வரவு செலவு போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நன்மை ஏற்படும்.

​மீனம்

தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆக வாய்ப்புண்டு என்பதால் மனதை ஒரு நிலையில் நிறுத்துவது நல்லது. பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை.

உணவு தொழில் மற்றும் வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளின் பிற்பகுதியில் சற்று பின்னடைவு வர வாய்ப்பு உண்டு. இருப்பினும் வெற்றி நிச்சயம் தனவரவு உண்டு.