யாழில் அங்கஜனின் அலுவலகம் தீக்கரையானது!

0
451

 யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டங்கள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

அதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. அரசாங்க ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டதோடு, மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய அரசாங்க உறுப்பினர்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன.

இன்று பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகமும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.