இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை !

0
290

லங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளது. குறித்த பதிவில், “அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளால் நாங்கள் ஆழ்ந்த கவலையடைகிறோம்.

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளைக் கண்டறிந்து செயற்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று கோரியுள்ளது.