நாட்டில் தற்போது டொலரோ ரூபாயோ இல்லை!

0
554

தற்போது நாட்டில் டொலரோ ரூபாயோ இல்லை எனவும், எதிர்காலத்தில் நாட்டைக் கைப்பற்றும் எந்தவொரு குழுவிற்கும் இது மிகவும் கடினமான செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

அதன்போது நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து யோசனை பெறுவதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி மிகவும் தீவிரமானதாக உணர்கிறது. நாட்டில் தற்போது டொலரோ ரூபாயோ இல்லை எனவும், எதிர்காலத்தில் நாட்டைக் கைப்பற்றும் எந்தவொரு குழுவிற்கும் இது ஒரு வலிமையான பயிற்சியாகும் என்றார்.