உக்ரைன் நாட்டு தேசியக் கொடி வண்ணத்தில் ஒளிர்ந்த ஈபிள் கோபுரம்!

0
199

பாரீசில் உள்ள ஈபிள் கோபுரம் நேற்றிரவு உக்ரைன் நாட்டின் தேசியக் கொடி நிறமான நீலம் மற்றும் மஞ்சள் நிற வர்ணத்துடன் ஒளிர்ந்தது.

போரினால் பாதிக்கப்பட்ட நாடு மற்றும் மக்களிடையே காணப்படும் ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதற்காக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

ஐரோப்பிய தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய அமைப்பின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரான்சு விடுத்த கோரிக்கையை ஏற்று ஈபிள் கோபுரம் உக்ரைன் தேசியக்கொடியால் ஒளியூட்டப்பட்டது.