கடத்திய முச்சக்கர வண்டியை மீட்ட பொலிஸார்

0
303

வாடகைக்கு பெற்ற முச்சக்கர வண்டியினை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரின் நடவடிக்கையினால் முச்சக்கரவண்டியை விட்டுவிட்டு  தப்பிச்சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவமானது நேற்று முன்தினம் (08) மாலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – மல்லாவி பகுதியிலிருந்து கிளிநொச்சிக்கு செல்ல முச்சக்கர வண்டியை வாடகைக்கு பெற்ற சந்தேக நபர் முச்சக்கர வண்டியின் சாரதியை கத்தி முனையில் அச்சுறுத்தி சாரதியின் தொலைபேசியையும் அபகரித்து முச்சக்கர வண்டியை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சம்பவம் குறித்து முச்சக்கர வண்டியின் சாரதி, கிளிநொச்சி பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, கிளிநொச்சி பொலிஸார் விரைந்து செயற்பட்டு முச்சக்கர வண்டியை பின் தொடர்ந்து சென்று போது, பொலிஸார் பின் தொடர்ந்து வருவதை அவதானித்த முச்சக்கர வண்டியை கடத்திய நபர் கிளிநொச்சி – ஐயக்கச்சி, கட்டைக்காடு காட்டுப்பகுதியில் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார், பளை பொலிஸார், மல்லாவி பொலிஸார்கள் விசாரணைகளை மேற்கொண்டுவருதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியை கடத்திய நபர் பொலிஸார் மீது விபத்தை ஏற்படுத்தி விபத்துக்குள்ளாகியதில் பொலிஸார், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.