மண்ணெண்ணெய் பெற்றுகொள்ள அவதியுறும் மக்கள்

0
240

நீண்ட வரிசையில் மண்ணெண்ணெய்க்காக காத்திருந்து இறுதியில் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் பல சம்பவங்கள் பதிவாகிவருகின்றன. 

நேற்று (09) ஹட்டன் பகுதியில் உள்ள சிபெட்கோ எண்ணை நிரப்பு நிலையம் ஒன்றிலும் இவ்வாறு மண்ணெண்ணெய்க்காக  நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்துள்ளனர். ஆனால் இறுதியில் மண்ணெண்ணெய் முடிந்துவிட்டதாக தெரிவித்ததையடுத்து அங்கிருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். 

கடந்த சில வார கால மலையகத்தில் உள்ள பிரதான நகரங்களில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருவதனால் பொது மக்கள் சமையலுக்காக மண்ணெண்ணெய் அடுப்பினையே உபயோகித்து வருகின்றனர். மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்ததன் காரணமாக மண்ணெண்ணெய்க்கான வரிசையும் நீண்டுள்ளன.

இந்நிலையில் மலையகப்பகுதியில் வாழும் மக்களுக்கு போதியளவு மண்ணெண்ணெய் கிடைக்காததன் காரணமாக மக்கள் கொட்டகலை, ஹட்டன், நோர்வூட் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பலர் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் இருந்தும் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியாது, ஏமாற்றத்துடன் பெரும் எண்ணிக்கையிலானோர் திரும்பிச் செல்வதாக பலரும் குற்றம் சுமத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தொடரும் அவலம்:  மண்ணெண்ணெய் பெற்றுகொள்ள அவதியுறும் மக்கள் (Photos)

தொடரும் அவலம்:  மண்ணெண்ணெய் பெற்றுகொள்ள அவதியுறும் மக்கள் (Photos)