ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறப்போவதில்லை – நாமல்

0
323

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டார் என மஹிந்தவைன் புதல்வர்களில் ஒருவரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

AFP ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டபோதே நாமல் ராஜபக்ச இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் காலி முகத்திடலில் அபோராட்டகாரகள் மீது மஹிந்த ஆரவாளர்கள் என கூறிய குண்டர்கள் தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து நேற்று இரவு மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆத்திரமடைந்த பொதுமக்கள் தீ வைத்தனர்.

இதை அடுத்து, இராணுவத்தினரால் மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் “நாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் உள்ளன. நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்,” என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவரது குடும்பத்திற்கு எதிரான தேசிய கோபத்தின் எழுச்சியை கடுமையான நிலைமை எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.