எவென்ரா கார்டன் சம்பவத்தில் கடற்படை வீரர் பலி!

0
532

நீர்கொழும்பு எவன்ரா கார்டன் உணவக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

29 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மினுவாங்கொடையைச் சேர்ந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கடற்படையில் அரச ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உணவக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது அதிக புகையை சுவாசித்ததால் அந்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.