இராணுவத் தளபதி பொது மக்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு!

0
713

முப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி, நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவி செய்ய வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு முப்படைகளும் பொலிஸாரும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக நாளை வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இக்காலப்பகுதிக்குள் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.