பொலிஸாரின் கோரிக்கையை ஒத்திவைத்த நீதிமன்றம்!

0
391

ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் உள்ள தடைகளை அகற்றக் கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கை மீதான விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொலிஸார் முன்வைத்த இந்த கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது குறித்த கோரிக்கை மீதான பரிசீலனையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதாக பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் “கோட்டா கோ கம” போராட்டத்தின் காரணமாக ஜனாதிபதி செயலகத்துக்கான நுழைவாயிலுக்கு இடையூறு ஏற்படுவதாக கோரி கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.