இலங்கையை மீட்க எப்போதும் தயார் – அறிவித்தது இந்தியா!

0
360

நெருங்கிய அண்டை நாடான இலங்கையின் ஜனநாயகம், நிலைபேண்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இதனைத் தெரிவித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது

இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாக, வரலாற்று உறவுகளுடன், இந்தியா,இலங்கையின் ஜனநாயகம், நிலைப்பேண் தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு முழுமையாக ஆதரவளிக்கிறது.