உயிருள்ள வரை அரசியலில் ஈடுபடமாட்டேன்! இலங்கை ஆளும் கட்சி எம்.பி அறிவிப்பு!

0
350

உயிருள்ள வரை அரசியலில் ஈடுபடமாட்டேன் என இலங்கை ஆளும் கட்சி எம்.பி குணபால ரத்னசேகர அறிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதியாக போராடி வந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

இலங்கையில் பல்வேறு இடங்களில் மகிந்த குடும்ப வீடு உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. குணபால ரத்னசேகர வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

தனது வீடு எரிக்கப்பட்ட நிலையில் உயிருள்ள வரை அரசியிலில் ஈடுபடமாட்டேன் என இலங்கை ஆளும் கட்சி எம்.பி குணபால ரத்னசேகர அறிவித்துள்ளார்.

இதுகுறித்து குணபால ரத்னசேகர சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது, நான் அரசியலில் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை.

இரவு பகலாக அறிவை பயன்படுத்தி சம்பாதித்த சொத்துக்கள் தீ வைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வரை நான் இனி அரசியலில் ஈடுபடமாட்டேன் என குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று பிரதமர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் பலர் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகும் எண்ணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.