மஹிந்த ஆதாரவாளர்கள் மூவருக்கு நேர்ந்த கதி!

0
324

நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானதாக கருதப்படும் வாகனத்தில் வந்த குழுவினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த போராட்டக்காரர்களால் வாகனம் தாக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான வாகனம் என்பதனால் , அந்த தாக்குதல் மஹிந்த ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.