இன்றைய ராசிபலன் {09 மே 2022}

0
470

​மேஷம்

வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பிரயாணங்களால் நன்மையே கிடைக்கும். ஆகவே தைரியமாக பிரயாணங்களை மேற்கொள்ளலாம். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை தீர்வுக்கு வரும். காதல் தொடர்பான பிரச்சினைகளில் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் நல்ல நாளாகும்.

சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகள் நன்மையில் முடியும் விசா தொடர்பான காரியங்களை வெற்றிகரமாக முடிக்கலாம் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள் ஒரு சிலர் வீடு கட்டுவது தொடர்பான காரியங்களில் ஈடுபடுவார்கள் இவற்றில் வெற்றி கிடைக்கும்.

​ரிஷபம்

பெண்களுக்கு இனிமையான நாள் ஆடை ஆபரண சேர்க்கை கிடைக்கும் காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு இனிமையான சந்திப்புகள் உண்டு வீடு கட்டுவது சொத்துக்கள் வாங்குவது போன்றவற்றில் முதலீடு செய்வதை பற்றிய யோசனைகள் அதிகமாக உண்டாகும் இவற்றில் வெற்றி கிடைக்கும் .

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதி அடைவார்கள். உங்கள் கடின முயற்சியை நிர்வாகம் புரிந்துகொள்ளும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வழிமுறைகள் ஓரிரு நாட்களில் தொடங்கும்.

மிதுனம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும் .

கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று ஓய்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம்

நேயர்களுக்கு இந்த நாள் அலைச்சலோடு கூடிய நாளாக அமையும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் பொருளாதாரத்தில் ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் இருக்கும்.

குழந்தைகளுக்கான கல்வி செலவுகள்சற்று கூடுதல் ஆனாலும் மனநிம்மதி ஏற்படும் ஒரு சிலருக்கு வெளியூர் சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவார்கள் தனவரவு இருக்கும்.

​சிம்மம்

எதிர்பார்த்த பணவரவு வருவதால் புதிய தொழில் முயற்சிகளைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் உங்கள் திறமையை மீண்டும் நிரூபித்து ஒரு சிலருக்கு விரும்பத்தக்க இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது திருமணம் தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டாலும் நல்ல பலன் உண்டு காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும் படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் .

கன்னி

படிப்பை முடித்து வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் மனதில் மகிழ்ச்சி நிலவும் முகம் பிரகாசமாகத் தோன்றும் எடுக்கும் காரியங்களில் வெற்றி நிச்சயம் இறைவன் அருள் துணை நிற்கும்.

உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை. குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம். செலுத்த வேண்டியது வரும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு புதிய பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளித்து விடுவீர்கள்.

துலாம்

காதலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தங்கள் பெற்றோர்களுடன் திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தையை இன்று துவக்கலாம் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் மற்றும் நண்பர்கள் உறவினர்களால் ஆதாயம் உண்டு சேவை தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கும்

படிப்பை முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் வெற்றி நிச்சயம் குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

​விருச்சிகம்

சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும் புதிய கல்வி வாய்ப்புகள் தென்படும் படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் வசூலாகும். புதிய கடன்களை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு கடன் கிடைக்கும். பல நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த காரியங்களையும் முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்று கொள்வீர்கள்.

தனுசு

சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள் ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் உடல் சோர்வை உணர்வீர்கள். மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள், விநாயகர் பெருமானை வழிபட விக்கினங்கள் விலகும்.

ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த தன வரவு உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

​மகரம்

நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். திறம்பட சமாளித்து நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வீர்கள். எதிர்பார்த்த கடன்கள் கிடைப்பது சற்று காலதாமதம் ஆகும்.

குழந்தைகளால் செலவுகள் சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு. வீண் அலைச்சல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும்.

கும்பம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணும் நாளாக இருக்கும் படிப்பு முடிந்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள் ஒருசிலருக்கு வாகன யோகம் உண்டாகும் விசா தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது

உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வார்கள். கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள்.

மீனம்

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆயில் அண்ட் கேஸ் மென்பொருள் துறையில் உள்ளவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும் சிலருக்கு நாடு விட்டு நாடு மாறுவது போன்ற சிந்தனைகள் செயல்பாடுகள் இருக்கும் இவற்றில் வெற்றி காண்பீர்கள்.

பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள் சொந்தத் தொழில் முயற்சிகள் வெற்றியடையும். நீண்டகாலமாக உத்தியோகத்தில் இருந்து வந்தவர்கள் புது தொழில்களைப் பற்றி சிந்திப்பார்கள். கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தென்படும். எதிர்பார்த்த சிபாரிசுகள் கிடைக்கும்.